கோவை : கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் காய்கறிகள் உள்பட அத்யாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க.அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் தக்காளி,கத்தரி, இஞ்சி,புடலை வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை கழுத்தில் மாலையாக அணிந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன் எம். எல் .ஏ., புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி ஆர் ஜி அருண்குமார் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ் .பி. வேலுமணி எம். எல். ஏ .தலைமை தாங்கி பேசியதாவது
முதல் அமைச்சர் விலைவாசி உயர்வை பற்றி கவலைப்படாதவராக உள்ளார்.தக்காளி உள்ளிட்ட அத்தனை பொருட்களும் விலை உயர்ந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் காய்கறிகள் விலை உயர்ந்த போது, கூட்டுறவு சங்கங்கள் மூலம் விலையை குறைத்து கொடுத்தோம்.
திமுக ஆட்சியில் காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள், கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
முதல் அமைச்சர் பெங்களூர் சென்று பிரதமர் வேட்பாளர் யார் என சொல்லாமல் கூட்டம் போட்டுள்ளார்.
திமுக அளித்த 520 வாக்குறுதிகளில் 1 வாக்குறுதியை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை
திராவிட மாடல் ஆட்சி என சொல்லி பால் விலை, சொத்து வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது
இந்தியாவை மாற்றியமைக்க உள்ளதாக ஸ்டாலின் சொல்வது வேடிக்கையாக உள்ளது .
பெங்களூர் சென்ற முதல் அமைச்சர் காவிரி நதிநீர் பிரச்சனையை பேசினாரா? தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் ஆட்சி திமுக எங்களை பாஜனதா அடிமை என்கிறார்கள். நீங்கள் தான் அடிமை.அதிமுக முயற்சியால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தோம். மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்து கொண்டு விவசாயிகளை பற்றி கவலைப்படமால் நடித்து கொண்டுள்ளார்
திமுக ஆட்சியில் ஒவ்வொரு மக்களும் கஷ்டப்படுகிறார்கள்எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது .
டாஸ்மாக் மட்டும் தான் திமுகவின் சாதனை. பாரில் அரசிற்கு செலுத்த வேண்டிய வரியை கட்டவில்லை.
அரசு கஜானாவிற்கு செல்வதை அவர்கள் கஜானாவில் நிறைத்து கொண்டுள்ளார்கள்
ஒன்றரை சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் அதிமுக ஆட்சி போனது.
எடப்பாடி பழனிசாமி எப்போது முதல் அமைச்சராக வருவார் என மக்கள் காத்திருக்கின்றனர்.
பொன்முடி வீட்டில் ரெய்டு வந்ததும் திமுக கூட்டணி கட்சிகள் அறிக்கை விட்டுள்ளனர். இது தான் அடிமை
சிங்கம் போல எடப்பாடி பழனிசாமி உள்ளார். எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார். கொள்கை வேறு, கூட்டணி வேறு என தெளிவாக எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளார்.
தமிழ்நாட்டு நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம். குடும்பத்திற்காக கூட்டணி அமைக்கவில்லை.
அதிமுக ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள், இப்போது எங்கே ஒடி ஒளிந்து உள்ளார்கள் எனத் தெரியவில்லை
போலீஸ் துறை குட்டிசுவராகி உள்ளது.போலீசாருக்கே பாதுகாப்பில்லை. திமுக ஆட்சியில் இதுவரை 20 பேர் ஜெயிலில் மரணம் அடைந்துள்ளனர்.
எதிர்கட்சியாக சிறப்பாக செயல்படுவது எடப்பாடி பழனிசாமி மட்டும் தான். மக்களுக்கான ஒரே தலைவர் அவர் மட்டும் தான். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமை தொகை அனைத்து குடும்பத்திற்கும் வழங்கப்படும் எனக் கூறிவிட்டு, தற்போது ஏகப்பட்ட வரன்முறை விதித்துள்ளனர்.
இது தான் திமுக. எடப்பாடி பழனிசாமி தந்த திட்டங்களை தான் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறார்.
திமுக கொண்டு வந்த ஒரு திட்டத்தை சொல்ல முடியுமா? திமுக ஆட்சி மோசமாக உள்ளது. நூல் விலையை குறைக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். போலீஸ் துறை அடிமை போல உள்ளனர். அதிகாரிகளாவது வேலை செய்யுங்கள்.
திமுகவின் 38 எம்.பி.க்கள் எதற்கும் லாயக்கற்றவர்ளாக உள்ளனர். கருணாநிதி ஆட்சியை விட தற்போது மோசமாக ஆட்சி நடக்கிறது. காய்கறி, அத்தியாவசிய பொருட்கள், கட்டுமான பொருட்கள் விலை குறைக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தை புறக்கணித்த திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்.
எப்போது பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் 40 தொகுதிகளிலும், சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வையும்,கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை உயர்த்தவும்,மில்களின் கோரிக்கையான - கழிவு பஞ்சு விலை, மின்சார நிலைக்கட்டணம் குறைக்கவும், பீக்அவர் கட்டணம் கைவிட வேண்டும்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாலங்கள். சாலைகள், குடிநீர் திட்டப்பணிகளை விரைவில் முடிக்கவும். தொடர்ந்து கோவை மாவட்ட மக்களை புறக்கணித்தும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதையும் கட்டுப்படுத்தத் தவறியவிடியா திமுக அரசை கண்டித்தும் இவைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் பொம்மை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி எம் எல் ஏக்கள் கே ஆர் ஜெயராம் ஏ கே செல்வராஜ் அமுல் கந்தசாமி சூலூர் கந்தசாமி தாமோதரன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.