இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு!

published 1 year ago

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தூத்துக்குடி மாவட்டம், சிவகங்கை வட்டம், குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 26 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள் (www.tnhrce.gov.in).

அர்ச்சகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய அறநிறுவனங்கள் அல்லது ஏனைய நிறுவனங்கள் நடத்துகின்ற ஏதேனும் ஆகமப் பயிற்சி மையத்தில் தொடர்புடைய பிரிவில் மூன்று ஆண்டு பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

உதவி அர்ச்சகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய அறநிறுவனங்கள் அல்லது ஏனைய நிறுவனங்கள் நடத்துகின்ற ஏதேனும் ஆகமப் பயிற்சி மையத்தில் தொடர்புடைய பிரிவில் மூன்று ஆண்டு பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,200 – 41,800

நாதஸ்வரம்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய அறநிறுவனங்கள் அல்லது தமிழக அரசால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் நாதஸ்வரம் வாசிப்பில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,300 – 48,700

தவில்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய அறநிறுவனங்கள் அல்லது தமிழக அரசால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் தவில் வாசிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,300 – 48,700

மடப்பள்ளி/ பரிசாரகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நெய்வேத்தியம், பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,200 – 41,800

ஓதுவார்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய அறநிறுவனங்கள் அல்லது ஏனைய நிறுவனங்கள் நடத்துகின்ற ஏதேனும் ஆகமப் பயிற்சி மையத்தில் ஓதுவார் பிரிவில் மூன்று ஆண்டு பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,600 – 36,900

பரிசாரகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நெய்வேத்தியம், பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,600 – 36,900

இரவுக் காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

பகல் காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

திருவலகு

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

மின் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,600 – 39,900

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,600 – 39,900

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/38272/1948/document_1.pdf என்ற இணையதளத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: செயல் அலுவலர், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.08.2023

 

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe