தேங்காய் மற்றும் கொப்பரை விலை அதிகரிக்குமா? வேளாண் பல்கலைக்கழகம் கணிப்பு

published 1 year ago

தேங்காய் மற்றும் கொப்பரை விலை அதிகரிக்குமா?  வேளாண் பல்கலைக்கழகம் கணிப்பு

கோவை : தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 நவம்பர் முதல் ஏப்ரல் 2023 வரை பாமாயில் இறக்குமதி அதிகரித்துள்ளதாலும் அதிகரிக்கப்பட்ட மற்றும் கச்சா சமையல் எண்ணெய்க்கான குறைந்த இறக்குமதி வரி காரணமாகவும் கொப்பரை விலையில் விரைவான சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேங்காய் எண்ணெயின் விலை இறக்குமதி செய்யப்படும் பாமாயிலின் விலையால் பெரிதும் தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விலை முன்னறிவிப்பு திட்ட குழு கடந்த 15 ஆண்டுகளாக தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டதன் அடிப்படையில் அக்டோபர் 2023 வரை தரமான தேங்காயின் பண்ணை விலை 10 முதல் 12 வரை இருக்கும் எனவும் தரமான கொப்பரையின் பண்ணை விலை கிலோவிற்கு 75 முதல் 80 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எனவே விவசாயிகள் சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe