பற்களில் மஞ்சள் கறை நீங்க வேண்டுமா ? அழகான வெண்மை பற்களுக்கான இயற்கை வழி !

published 1 year ago

பற்களில் மஞ்சள் கறை நீங்க வேண்டுமா ? அழகான வெண்மை பற்களுக்கான இயற்கை வழி !

நம் அனைவருக்குமே நல்ல வெள்ளையான முத்துப் போன்ற பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களில் மஞ்சள் கறையை நீக்குவது எப்படி: பற்கள் மஞ்சள் கறைகள் இல்லாமல் இருப்பது உங்களுடைய வாய் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி.

துரதிர்ஷ்டவசமாக அந்த பாக்கியம் பலருக்கு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் உண்ணும் சில உணவுகளும், புகைப்பழம் போன்ற கெட்ட பழக்கங்களும், முறையான பராமரிப்புக்களை பற்களுக்கு கொடுக்காமல் இருப்பதும் தான். 

அதுமட்டுல்ல, அது உங்களுடைய முகத்துக்கு அழகையும் கூட்டக்கூடியது. வயதாக வயதாக பற்களில் வெண்மை நிறம் மாறி மஞ்சள் நிறம் படிய ஆரம்பிக்கும் தன்மை உண்டு. ஆனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்க பல இயற்கை வழிகள் உள்ளன.

பற்கள் வெண்மையாக இல்லாமல் மஞ்சள் கறை படிந்து காணப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவையாவன,

காபி, டீ 

அருந்தும் பழக்கம்

மரபணுக்கள்

முறையான பற்கள் சுகாதாரமின்மை

,புகைப்பிடித்தல்,

கார்பனேட்டட் பானங்கள்.

இயற்கை வழி மூலம் மஞ்சள் பற்களை அகற்றுவது எப்படி?

 

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை

பேக்கிங் சோடா இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது, மேலும் எலுமிச்சையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. டூத் பிரஷ்ஷில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவைத் தூவி, சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, பற்களைத் துலக்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் விரைவில் நீங்கும். ஆனால் இப்படி வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் செய்யக்கூடாது. இல்லாவிட்டால்,எனாமல் தேய்ந்துவிடும்.

பால் பவுடர் மற்றும் டூத் பேஸ்ட்

பால் பவுடர் போன்ற நிறத்தில்  பற்களை முத்துப் போன்று மாற்ற உதவுவதோடு, ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது . அதற்கு  டூத் பிரஷ்ஷில் டூத் பேஸ்ட்டை வைத்து, அதன் மேல் சிறிது பால் பவுடரைத் தூவி பற்களைத் துலக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு முறை பற்களைத் துலக்க, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் வெள்ளையாக மாறும் . 

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை 



சிட்ரஸ் பழங்ககளான ஆரஞ்சு மற்றும்  எலுமிச்சை போன்றவை பற்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அகற்றி பற்களை சுத்தம் செய்வதற்கு பெரிதும் உதவுகின்றன. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைத் தோலைத் தேய்த்து பற்களை சுத்தம் செய்யலாம்.

எலுமிச்சை சாறு கல் உப்பு,  மற்றும் டூத் பேஸ்ட் 

அரை டீஸ்பூன் கல் உப்பினை ,சிறிது எலுமிச்சை சாற்றோடு  கலந்து, அத்துடன் சிறிது டூத் பேஸ்ட்டையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதனை  பற்களில் தடவி ஒரு நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக தேய்க்கவும் அதன் பின்பு நன்கு கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒன்று-இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. 

ஆப்பிள் சைடர் வினிகர் 



ஆப்பிள் சைடர் வினிகர் உடல் ஆரோக்கியத்துக்கும் தலைமுடிக்கும் மட்டும் நன்மை தருவதோடு அது பற்களையும் வெண்மையாக்கும் தன்மை கொண்டது. அரை டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த நீரால் தினமும் காலையில் பற்களைத் துலக்கிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe