அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கோவை பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்

published 1 year ago

அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கோவை பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்

கோவை : தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் (RTE) சட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிப்பது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், வசூலித்த தொகையை அந்த மாணவர்களின் பெற்றோரிடம் திருப்பித் தர வேண்டும் என்றும் தனியார் பள்ளிகளுக்கு கோவை பள்ளிக் கல்வித்துறை திங்கட்கிழமை அன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், பள்ளிகள் இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக தனிமைப்படுத்தவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் (டிஇஓ) (பொறுப்பு) சி. பெல்ராஜ் கூறுகையில், "சில பள்ளிகளில் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள், கூடுதல் ஆய்வக வசதிகள் அல்லது உல்லாசப் பயணங்களுக்காக கட்டணம் வசூலிக்கிப்படும் என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். இதர கட்டணங்களுக்கு  இச்சட்டத்தின் கீழ் விலக்கு கோர முடியாது.

இந்த கல்வியாண்டில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல தனியார் பள்ளிகள் மீது பல புகார் வந்துள்ளது.  அந்த கட்டணததிற்கான ரசீது பெற்றோரிடம் வழங்கப்படவில்லை.

கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் கீழ் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் சார்பில் பள்ளிகளின் இந்த நடைமுறை குறித்து புகார்கள் வருவது வருத்தமளிக்கிறது. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை பள்ளிகள் அந்தந்த பெற்றோரிடம் ஒப்படைத்து, இந்த விவரங்கள் குறித்த அறிக்கையை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.

கடந்த கல்வி ஆண்டில் கல்வி கட்டணம் செலுத்தாத RTE மாணவர்கள் சிலர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இது கண்டனத்துக்கு உரியது. எந்தவொரு பள்ளியிலும் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி குழந்தைகளை தேர்வுக்கு எழுத விடாமல் தடுத்து நிறுத்தக் கூடாது." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe