கோவை சிறைத் துறை சார்பில் தனி அரங்கம்;கூண்டுக்குள் வானம்

published 1 year ago

கோவை சிறைத் துறை சார்பில் தனி அரங்கம்;கூண்டுக்குள் வானம்

கோவை : கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் தமிழ்நாடு சிறைத்துறை சார்பில்  'கூண்டுக்குள் வானம்' என்ற தலைப்பில் தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகக் காட்சியில் இப்பகுதி அமைந்திருப்பதற்கான நோக்கம் பழமைவாய்ந்த புத்தகங்களுக்கு பதில் புதிய புத்தகங்களை கொடுப்பதே ஆகும்.தமிழகம் முழுவதிலும் உள்ள  சிறைகளில் சிறைவாசிகளுக்கான நூலகங்கள் இருக்கின்றன.அனால், அங்கு இருக்கக்கூடிய புத்தகங்கள் பழைய புத்தகங்களாக இருப்பதால், மீண்டும் எடுத்து படிக்க இயலாத  சூழ்நிலை இருக்கிறது.அதேபோல், சிறைகளில் உள்ள நூலகங்களில் புத்தகங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

மேலும் இந்த இரண்டு குறைகளைக் களைய வேண்டும் என்பதற்காகவே, இந்தப் புத்தகக் காட்சியில் எங்களுக்கு அரங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகக் காட்சியில் அரங்கு அமைத்ததற்கு, பொதுமக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலம் மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கு குறித்த செய்தியும் பெரிய அளவில் பரவியிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் புத்தக பதிப்பாளர்கள் அரங்க உரிமையாளர்கள் என அனைவருமே ஆவலாக வந்து புத்தகங்களைக் கொடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe