கோவையில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு ரயில் சேவை

published 1 year ago

கோவையில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு ரயில் சேவை

கோவை : சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்திருப்பதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கான ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 5ம் தேதி முதல் 26ம் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சனிக்கிழமை தோறும் காலை 9.10 மணிக்கு ரயில் புறப்பட்டு 2.25 மணிக்கு ஊட்டி ரயில் நிலையம் சென்றடையும்.

இதேபோல், 6ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஞாயிறு தோறும் காலி 11.25க்கு ஊட்டியில் இருந்து புறப்படும் ரயில் 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் ரயிலில் முதல் வகுப்பில் 40 சீட்டுகளும், இரண்டாம் வகுப்பில் 140 சீட்டுகளும் இருக்கும்.

குன்னூரில் இருந்து ஊட்டி செல்லும் ரயிலில் முதல் வகுப்பில் 80 சீட்டுகளும் இரண்டாவது வகுப்பில் 140 சீட்டுகளும் இருக்கும்.

இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe