கோவையில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி- விபத்து நேரங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து மருத்துவ ஒத்திகை

published 1 year ago

கோவையில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி- விபத்து நேரங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து மருத்துவ ஒத்திகை

கோவை : கோவை பாலசுந்தரம் சாலையில் ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனை சார்பில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விபத்து காலங்களில் எவ்வாறு விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, முதலுதவி எவ்வாறு அளிப்பது, போன்ற ஒத்திகைகள் நிகழ்த்திக் காட்டப்பட்டன.  விபத்து காலங்களில் செயல்படுவது என்று செயல்முறைகளுடன் விளக்கப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பேருந்து விபத்து நிகழ்வு நிகழ்த்திக் காட்டப்பட்டது.  இதில் 21 பயணிகளும் ஒரு ஓட்டுநரும் கலந்து கொண்டனர். பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி பின்னர்  மின்கம்பத்தில் மோதி நிற்பது போன்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பேருந்தின் சக்கரத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டது போன்றும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த ஒத்திகையில், விபத்து நடைபெற்ற இடத்தில் தள மீட்புக் குழு  விரைந்து நோயாளிகளுக்கு முதல் உதவி செய்தனர்.  மேற்கொண்டு உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்வது போன்ற நிகழ்வுகள் ஒத்திகையாகச் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த முழு மாதிரி பயிற்சியும் பதிவு செய்யப்பட்டது. இதில் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் கலந்து கொண்டார். மேலும் பொதுமக்களுக்குக் குழப்பங்கள் ஏற்படாத வகையில், நிகழ்ச்சிக்கான சுவரொட்டிகள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த ஒத்திகை நிகழ்ச்சி மிகவும் தத்ரூபமாகச் செய்து காண்பிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe