கோவை போத்தனூரில் ரூ 5.50 லட்சம் மதிப்பிலான ரயில்வே பொருட்களைத் திருடிய 5 பேர் கைது 7 லேப்டாப் பறிமுதல்

published 1 year ago

கோவை போத்தனூரில்  ரூ 5.50 லட்சம் மதிப்பிலான ரயில்வே பொருட்களைத் திருடிய 5 பேர் கைது  7 லேப்டாப் பறிமுதல்

கோவை: கோவை போத்தனூர் ரயில் நிலையம் டிப்போவில் அடிக்கடி பொருட்கள் திருட்டுப் போனது இது குறித்து ரயில்வே பாதுகாப்புப்படை சேலம் கோட்ட ஆணையாளர் சுவுரவ் குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுனில் குமார் தலைமையிலான போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வந்தனர். 

கடந்த 20 நாட்களாகக் கோவை சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் திருட்டில் ஈடுபட்ட நபர்களைத் தேடி தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில் போத்தனூர் ரயில்வே டிப்போவில் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 7 புதிய லேப்டாப்கள் மற்றும் ரூ 2 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளைத் திருடியது

அல்அமீன் காலணியைச் சேர்ந்த முகமது தாரிக் (21), ஜி.எம். நகரைச் சேர்ந்த அபுதாஹிர் @ சோட்டு வயது(22),  அப்துல் காதர் @ ரோஹித் (22), கரும்புகடை பகுதியைச் சேர்ந்த சஞ்சய் @ சன்னி (19),  தியாகி சிவராமன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (27) ஆகிய 5 பேரைக் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான 7 லேப்டாப்கள் மற்றும் ரயில்வே பொருட்களை மீட்டனர்.

 பின்னர் கைது செய்யப்பட்ட அஞ்சு பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe