உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற வாக்கத்தான் | புகைப்பட தொகுப்பு

published 1 year ago

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற வாக்கத்தான் | புகைப்பட தொகுப்பு

கோவை: உலக தாய்ப்பால் கோவையில் பெண்கள் கலந்து கொண்ட வாக்கத்தான் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம், அதனால் தாய்மார்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என இந்நாளில் அதன் நன்மைகளை எடுத்துரைப்பதே நோக்கமாக இருக்கும்.

அந்த வகையில் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கோவையில் பெண்கள் கலந்து கொண்ட வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

வுமென்ஸ் செண்டர் மருத்துவமனை மற்றும் ரோட்டரி க்ளப் காட்டன் சிட்டி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று காலை 7 மணிக்கு இந்த வாக்காத்தான் தொடங்கி நடைபெற்றது.

இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா கொடியை சேர்த்து துவக்கி வைத்தார்.

இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள், தாய்மார்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

வாக்கத்தான் புகைப்படங்களை இந்த செய்தியில் காணலாம்.

இது குறித்து விழிப்புணர்வில் ஈடுபட்ட குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சரண்யா கூறியதாவது:

பிறக்கும் குழந்தைகளில் 55-60 % குழந்தைகள் தாய்ப்பால் பற்றாக்குறையுடன் இருக்கின்றன. அவர்கள் தாய்பாலுக்கு பதிலாக மாற்று பால் ஆதரத்தை பருகி வரும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பணிக்கு செல்கின்ற 80% தாய்மார்கள் குழந்தைகளுக்கு முழுமையாக பாலுட்ட முடியாமல் இருக்கின்றனர்.

குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு ஆறு மாத காலம் கட்டாயம் பாலூட்ட வேண்டும்.

 எந்த அளவுக்கு பாலூட்ட முடியுமோ அந்த அளவுக்கு பாலூட்டுதல் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கான நன்மைகளை தாய்ப்பால் பயக்கும் என அவர் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe