ராமு செல்லப்பா இயக்கத்தில் வெப் தொடரில் நடிக்கிறாரா விமல்? 

published 1 year ago

ராமு செல்லப்பா இயக்கத்தில் வெப் தொடரில் நடிக்கிறாரா விமல்? 

காமெடி  மற்றும் குடும்ப கதைகளில் சிறப்பாக நடித்து ரசிகர்களிடையே  பிரபலமானவர் விமல். தமிழ் சினிமாவில் இவர் நடித்த படங்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.அதன்படி இவர் நடித்த களவாணி, தேசிங்கு ராஜா, வாகை சூட வா திரைப்படங்கள் இன்றும் நகைச்சுவைக்கு என்று தனி இடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில் சமீப காலமாக இவருடைய திரைப்படங்கள் சரியாக ஓடாததால் படவாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார். இதில் கடந்த ஆண்டு வெளியான விலங்கு வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் சமீப காலமாக இவருடைய திரைப்படங்கள் சரியாக ஓடாததால் படவாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார். இதில் கடந்த ஆண்டு வெளியான விலங்கு வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து தற்போது வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதன்படி, தற்போது மீண்டும் புதிய வெப் தொடரில் விமல் நடிக்க உள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இந்த வெப் தொடரை இயக்குநர் ராமு செல்லப்பா இயக்க உள்ளார்.

கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்த தொடர் க்ரைம், த்ரில்லர் கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த தொடரில் பிக் பாஸ் பாவ்னி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

தற்போதைய இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதியில் நடைபெற்று வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe