வீடு கட்டி தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கறிஞர்: பெண் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு

published 1 year ago

வீடு கட்டி தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கறிஞர்: பெண் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு

கோவை : கோவை ஆர்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த இந்திராணி. இவர் சூலூர் பகுதியில் வீடு கட்டுவதற்காக இடம் வாங்கி உள்ளார். மேலும் அதில் வீடு கட்டி தருவதாக ஏமாற்றியதாக சித்திரநாதன் என்பவருக்கும் இந்திராணிக்கு தகராறு ஏற்பட்டது.

மேலும் இதற்குத் தீர்வு காணத் தமிழரசன் என்ற வழக்கறிஞரைச் சந்தித்துக் கூறி உள்ளார். இதனை அவர் தீர்வு கண்டு தருவதாகக் கூறினார்.

மேலும் சித்திரைநாதனுக்கு ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று பணத்தை இந்திராணி இடம் பெற்றுக் கொண்டு. பின்னர் அந்த பணத்தை சித்திரநாதனிடம் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

 மேலும் வழக்கறிஞர் தமிழரசன் தான் பொறியியல் படிப்பு படித்து உள்ளதாகவும் அந்த இடத்தில் வீடு கட்டி தருவதாக கூறி ரூபாய் 8 லட்சத்து 70,000 பணத்தைப்  பெற்றுக் கொண்டு கட்டிடத்தின் பேஸ் மட்டத்தை மட்டும் கட்டிவிட்டு நீங்கள் கொடுத்த பணத்திற்கு இவ்வளவு தான் கட்ட முடியும் என்றும் கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து அவர் கேட்டதற்கு அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வழக்கறிஞர் சங்கத்தில் புகார் கூறியதாகவும், அதன் மீது விசாரணை நடத்திய தலைவர் மீதித் தொகையைத் திருப்பி வாங்கி தருவதாகக் கூறினார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை இல்லை என்று கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெனையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe