கோயம்புத்தூர்ல இருந்துட்டு 'ஸ்ட்ரெஸ்ஸா' இருக்குனு 'பீல்' பன்றிங்களா? இதோ நீங்க ரிலாக்ஸ் செய்ய பிக்னிக் ஸ்பாட் !

published 1 year ago

கோயம்புத்தூர்ல இருந்துட்டு 'ஸ்ட்ரெஸ்ஸா' இருக்குனு 'பீல்' பன்றிங்களா? இதோ நீங்க ரிலாக்ஸ் செய்ய பிக்னிக் ஸ்பாட் !

கோவை : கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள இந்த ஆழியாறு அணை சிறந்த பிக்னிக் ஸ்பாட்டாக உள்ளது. இதனைச் சுற்றிலுள்ள பசுமையான மலைகள் மற்றும் காடுகளும் பார்ப்பவர் மனதை வருடும் வகையில் அமைந்துள்ளது .

இது சுமார் கோவையிலிருந்து 65 கி.மீ  தொலைவில் அமைந்துள்ளது. அணையின் மூன்று புறமும் மலைகள் சூழ்ந்த சூழல் மிகவும் மனதைக் கவர்வதாக உள்ளது .

1959 முதல் 1969 வரையான காலப்பகுதியில் ஆழியார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது, அணைக்கு முதன்மையான நோக்கம் வேளாண்மை மேம்படுத்தும் நோக்கத்திற்காகப் பொள்ளாச்சி மற்றும் அருகிலுள்ள இடங்களுக்குப் பாசனத்திற்கு ஆதரதிற்கும் ஆகும்.

முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் வற்றாமல் பாயும் ஆழியாறு, கடல்போலக் காட்சியளிக்கும். ஆழி என்பது கடலைக் குறிக்கும். கடல்போன்ற ஆறு என்பதாலேயே இதற்கு ஆழியாறு என்று பெயர்.

ஆழியாறு அணைக்குச் சென்றால் தோட்டம், மீன்வளம், விளையாட்டு பகுதி மற்றும் மினி தீம்-பார்க்  உள்ளிட்ட  மிகச்சிறந்த இடங்களைக் கண்டு கழிக்கலாம்.

இங்குப் படகு சவாரியும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ரிலாக்ஸ் செய்ய ஏதுவான பெஸ்ட் ஸ்பாட்டாக ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் மகிழும் வண்ணம் இந்த அணையில் உள்ள பகுதிகள் அமைந்துள்ளது .

இந்த அணைக்குச் சென்றால் இங்குள்ள நீரின் சத்தமும், பூங்காக்களின் அழகும், காற்றின் ஓசையும் நம் மனதில் உள்ள ஸ்ட்ரெஸ் அனைத்தையும் எடுத்துக் கொண்டு போகும் அளவிற்கு இயற்கையான சூழலில் அமைத்துள்ளது.

அணையின் எதிரே உள்ள வண்ண மீன் காட்சியகமும், அதன் அருகே உள்ள மீன் வருவல் கடையும் இதமான இயற்கையோடு சேர்ந்து ரசித்து ருசித்து மகிழலாம்.

 

 

 

இந்த அணையின் அருகில் சற்றே மலையேறினால் குரங்கு அருவி என்றழைக்கப்படும் சிறு அருவி இருக்கிறது. இங்கு எடுக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படங்கள் இவற்றின் பரவலான தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe