இந்த மாதம் நம்ம ஊர் கிளைமேட் எப்படி இருக்கும்.? மழை இருக்குமா? இருக்காதா?

published 1 year ago

இந்த மாதம் நம்ம ஊர் கிளைமேட் எப்படி இருக்கும்.? மழை இருக்குமா? இருக்காதா?

கோவை : கோவையில் ஆகஸ்ட் மாதம் வானிலை எப்படி இருக்குமோனு யோசிக்க வேண்டாம். எப்படி இருக்கும் என்று கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கணித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகு, பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் கோவையில் உள்ள அனைத்து பகுதிகளும் குளுகுளு என மாறியது.

ஆடிமாதம் என்பதால் காற்றுடன் சேர்ந்த மழையைப்  பொதுமக்கள் அனுபவித்து மகிழ்ந்தனர். இந்த இதமான வானிலையினை மக்கள் ரசித்தனர்.

இப்பொழுது கோவையில் கடந்த இரு வாரங்களாக மழை குறைந்து வெப்பம் வாட்டி வருகிறது. வெயில் தாங்க முடியாமல் இருப்பதால், கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்? எனக் கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பினோம்.

அதற்கு அவர் கூறியதாவது:

கோவையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு 33 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது. திருப்பூரில் 35 டிகிரை முதல் வெப்பம் பதிவாகும், ஈரோடு மாவட்டத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும்.

வெப்ப சலனம் காரணமாக மதிய நேரத்திற்கு மேல் மேற்கு மண்டலத்தின் வடக்கு பகுதிகளில் (அதாவது அவினாசி சாலையின் வடபுறம்) ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வால்பாறை, ஊட்டி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களிலும் மழைக்கு வாய்ப்பு இல்லை. அங்கும் வெயில் இருக்கும்.

கோவை மாவட்டத்திலும், கேரளாவிலும் ஆகஸ்ட் இறுதி வாரம் முதல் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

அப்போது ஈரப்பதமான வானிலையைக் கோவை மக்கள் அனுபவிக்கலாம். அதுவரை வெப்பம் வாட்டும். பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும்.

இவ்வாறு சந்தோஷ் கிருஷ்ணன் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe