கோவையில் ஆன்லைன் வேலை...பெண்ணிடம் ரூ. 7.61 லட்சம் மோசடி 

published 1 year ago

கோவையில் ஆன்லைன் வேலை...பெண்ணிடம் ரூ. 7.61 லட்சம் மோசடி 

கோவை : கோவையில் ஆன்லைன் வேலை எனக் கூறி பெண்ணிடம் ரூ. 7.61 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி எல்ஜிபி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீமுருகன் மனைவி பிரியாலட்சுமி(30). இவரது செல்போனில் சமீபத்தில் டெலிகிராமில் குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அதன் லிங்க்-ஐ கிளிக் செய்து பிரியாலட்சுமி தனது விவரங்களைப் பதிவிட்டார். 

தொடர்ந்து அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை திரிஷா என அறிமுகப்படுத்திக் கொண்டு, டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஆலோசகராக வேலைவாய்ப்பு உள்ளது எனவும், கம்பெனி இணையதள முகவரியில் ரிவ்யூ கொடுத்தால் அதிகளவு கமிஷன் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். மேலும் தாங்கள் கொடுக்கும் பணிகளை ஆன்லைனில் முடித்துக் கொடுத்தால் அதிகமாகச் சம்பாதிக்கலாம் எனவும் தெரிவித்தார். இதனை நம்பிய பிரியாலட்சுமி ஆன்லைன் மூலம் அவர்கள் கொடுத்த பணிகளை முடித்துக் கொடுத்தார். அதற்காக அவர் அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கில் ரூ. 10 ஆயிரம் முதலீடு செய்தார். 

அவருக்கு கமிஷன் தொகையாக ரூ. 13,407 கிடைத்தது. மற்றொரு பணியை முடித்ததற்காக அவருக்கு மீண்டும் ரூ. 11,706 கிடைத்தது. தொடர்ந்து பிரியாலட்சுமியை தொடர்பு கொண்ட நபர் நீங்கள் அதிகமாக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்ததையடுத்து, பிரியாலட்சுமி சிறிது, சிறிதாக அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கில் ரூ.7,61,916 அனுப்பினார்.

 ஆனால் அதன் பின்னர் அவருக்கு கமிஷன் தொகை கிடைக்கவில்லை. மொத்தமாக ரூ. 7,61,916 சுருட்டி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபரைத் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இது குறித்து பிரியாலட்சுமி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe