லைஃப்-ல 'ஸ்லிப்' ஆகாம டாப்-ல போகணுமா? அப்போ கோவையில் இருக்குற இந்த 'ஸ்பாட்-க்கு' போங்க!

published 1 year ago

லைஃப்-ல 'ஸ்லிப்' ஆகாம டாப்-ல போகணுமா? அப்போ கோவையில் இருக்குற இந்த 'ஸ்பாட்-க்கு' போங்க!

வாழ்க்கையில் நிறைய ஸ்லிப் ஆகிட்டே இருக்கோம்னு  நினைக்கறீங்களா! அப்போ  உங்கள் மனசில் வர வேண்டியது, ஒன்றே ஒன்று தான் 'யானைக்கும் அடி சறுக்கும் '. உங்க மனச டாப்க்கு கொண்டு போக இந்த ஸ்பாட்க்கு போங்க.

கோயம்புத்தூரிலிருந்து 76 கிமீ  தொலைவிலுள்ள டாப்சிலிப் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலை மலைத்தொடரில் அமைந்துள்ளது.

இந்த ஸ்பாட்  சென்றால்  கண்ணுக்கு விருந்து படைக்கும்  அழகுக்கு அளவே இல்லை. பச்சை பசேலென்று புற்களின் ஆட்டம், சுற்றிலும் காற்றைப் பிடித்து வரும் மரங்கள், அங்கு இருந்து சற்று மேலே பார்த்தால் வானம் கொட்டும் இயற்கையின் அழகை  நமது கண்கள் படம் எடுக்கும்.

இங்குள்ள புற்களின் அழகைப் பார்த்தால் நம் பாதம் கூட தரையின் மேல் படாமல் ஸ்லிப் ஆகிவிடும். எனவே ப்ளீஸ் புல் தரை மீது நடக்காதீர்

டாப்ஸ்லிப்பில் கீழேயிருந்து டாப்பில் பார்க்கும் போதும், டாப்பில்  சென்று  கீழே அழகாய் நோக்கும் போதும் நீங்கள் உணர்வது இயற்கையின் அழகிய படைப்பான நம்மிடம் இயற்கை தன் படைப்பின் அழகைக் காட்ட , லைப்பில் அப் அண்ட் டவுனும்  ஒரு அழகு தான் என்பதை இந்த ஸ்பாட் உணர்த்துகிறது.

இங்குச் சென்றால் நீங்கள் சிங்கவால் மக்காக்கள், மயில்கள், லாங்கர்ஸ், புள்ளிமான்கள் மற்றும் யானைகளைப் பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது. டாப் ஸ்லிப்பின் அழகைக் கண்டு காதலில் விழுவதோடு மட்டுமில்லாமல் வனவிலங்குகளையும் கண்டு ரசித்து இன்புற்று மகிழலாம்.

'வானம் பார்த்த பூமி' என்பதைப் போல நாமும் டாப்ஸ்லிப்பின் அத்தனை அழகையும் வானத்தோடு சேர்ந்து, இயற்கையின் ஓசையோடு இயற்கையின் மடியில் அனைவரும் இளைப்பாறும் அழகிய தருணம்.

இந்த டாப்ஸ்லிப் வாழ்க்கையின் தத்துவத்தை நமக்கு உணர்த்தும் - சொர்க்கத்துக்குச் செல்லும் சாலைகள் கரடு முரடாகத்தான் இருக்குமோ என்னவோ, அதுபோல இங்கு நம்மை வரவேற்க மண்ணோடு காதல் கொள்ளும் புல் தரைகளும், தென்றல் நம் மீது வீசி  நம் மனதை இயற்கையோடு காதல் புரிய வைக்கும்.

லைப்ல ஒவ்வொரு நிகழ்வும் வரிசையாக நடக்கும் என்பதை நமக்கு உணர்த்தும் வகையில் இங்குள்ள மரங்களோ வரிசையில் நின்று காற்று என்னும் மேளதாளங்களோடு நம்மை வரவேற்கும் !

இங்குள்ள ட்ரீ  ஹவுசில் தங்கினால் இந்த ஸ்பாட்டின் ஒட்டுமொத்த அழகும் நம் கனவில் வந்து நடனமாடிச் செல்லும். 

இங்குச் சென்றால் சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா என நீங்கள் வியக்கும் அளவுக்கு உங்கள் மனது டாப்பில் ஸ்லிப் ஆகாமல் சென்று விடும். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe