கோவையில் சிறுவனுக்கு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை!

published 1 year ago

கோவையில் சிறுவனுக்கு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை!

கோவை : கோவையில் உள்ள குப்புசாமி மருத்துவமனையில் இன்று மரபணுக் கோளாறுகள் உடைய 2 குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை   செய்யப்பட்டுள்ளது.

மரபணு குறைபாட்டினால் 4 வயது சிறுவனுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து கடுமையான இரத்த சோகை மற்றும் நுரையீரல், மூளை தொற்று நோய்களால் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அச்சிறுவன் இயல்பு வாழ்க்கை வாழ முடியாமல் எப்போதும் சோர்வுற்றுக் காணப்பட்டான். இதனை அறிந்த மருத்துவர்கள் அவருக்கு எலும்பு மஜ்ஜையிலிருந்து ஸ்டெம் செல் எடுத்து மாற்றுச் சிகிச்சை செய்ய முடிவு செய்து வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.

இந்த மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஸ்டெம் செல் தானம் செய்பவர்களுக்கு HLA எனப்படும் Human Leukocyte Antigen பொருத்தமுடைய உடன் பிறந்தவர்கள், அல்லது பாதி HLA பொருத்தமுடைய பெற்றோர், அல்லது ரத்த சம்பந்தம் இல்லாத வெளி நபராகவோ கூட இருக்கலாம். 

அதன்படி, இந்த 4 வயது சிறுவனுக்கு அவருடைய அண்ணனின் HLA பொருத்தமாக இருந்ததை அறிந்த மருத்துவர்கள், அண்ணனின் ரத்தத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஸ்டெம் செல்களை பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கீமோதெரபி கொடுத்துச் செலுத்தப்பட்டன. தற்போது ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை முடித்து 6 மாதங்கள் ஆகிய நிலையில், எந்த நோய்த்தொற்றும் இல்லாமல் நன்றாகச் சிறுவன் உள்ளார்.

இதேபோல், 2. 5 வயது சிறுவன் ம்யுகோபோலிசாக்கரிடோசிஸ் (Mucopolysaccharidosis type 2) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரும் ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்து உள்ளார் என்பதை மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் .

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe