கோவையில் மீன் வாங்கினால் தக்காளி 'ஃப்ரீ'

published 1 year ago

கோவையில் மீன் வாங்கினால் தக்காளி 'ஃப்ரீ'

கோவை : கோவையில் மீன் வாங்கினால் தக்காளி இலவசம் என்று அறிவித்து விற்பனை செய்து வருகின்றனர் மீன் வியாபாரிகள்.

தமிழகத்தில் தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனையானது

தற்போது உழவர் சந்தை விலை அடிப்படையில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே கோவையில் மீன் வாங்குபவர்களுக்குத் தக்காளியை இலவசமாகக் கொடுத்து வருகிறார் மீன் வியாபாரி ஒருவர்கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் கடை நடத்தி வருபவர் ஜாபர். இவர் தனது கடைக்கு மீன் வாங்க வருபவர்களுக்குக் கால் கிலோ  தக்காளி இலவசமாக வழங்கி வருகின்றார்.

தக்காளி விலை உயர்வு காரணமாக மீன் மார்கெட்டிற்கு மீன் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இதனால் வாடிக்கையாளர்களைக் கவர இரு தினங்கள் மீன் வாங்குபவர்களுக்குத் தக்காளி இலவசமாகக் கொடுப்பதாகக் கடை உரிமையாளர் தெரிவித்தார்.

தக்காளி விற்கும் விலைவாசிக்கு  மீன் வாங்குபவர்களுக்குக் கால் கிலோ தக்காளி இலவசமாகக் கொடுப்பதால் வாடிக்கையாளர்கள் கூடுதலாக மீன் வாங்கி  செல்வதாக வியாபாரி தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe