கோவையில் 15 டன் மற்றும் 7 டன் எடை கொண்ட இரண்டு அரச மரங்கள் மறு நடவு

published 1 year ago

கோவையில்  15 டன் மற்றும் 7 டன் எடை கொண்ட இரண்டு அரச மரங்கள் மறு நடவு

கோவை : கோவை வேலாண்டிபாளையத்தில் 15 டன் மற்றும் 7 டன் எடை கொண்ட இரண்டு அரச மரங்கள் இன்று மறு நடவு செய்யப்பட்டது.

கோவை தடாகம் சாலை நெடுஞ்சாலை  விரிவாக்கத்திற்காக வெட்டப்பட  இருந்த 25 மரங்களைக்  கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் செயல் (ஒரு சமூக செயற்பாட்டுக் களம்) அமைப்பின் சார்பில் வேருடன் அகற்றப்பட்டு வேலாண்டிபாளையம், கோவில் மேடு பகுதியில் மறு நடவு செய்யப்பட்டது. 

இதில் 21 மரங்கள் துளிர்த்துள்ளது.

இந்நிலையில் டிவிஎஸ் நகர் பேருந்து நிறுத்தத்தில் நன்கு வளர்ந்திருந்த அரச மரத்தின் கிளைகள் நறுக்கப்பட்டு 15 அடி உயரம் உள்ள 15 டன் எடை கொண்ட அரச மரத்தையும், ஏழு டன் எடை கொண்ட அரச மரத்தையும் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவு மிகுந்த கவனத்துடன்  எடுத்துவரப்பட்டு  இன்று அதிகாலை 4 மணி அளவில் மறு நடவு செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe