கோவை எஃபி.சி.ஐ கிடங்கில் நுழைவு வாயில் வேண்டாம்.. கவுன்சிலர்கள் கலெக்டரிடம் மனு

published 1 year ago

கோவை எஃபி.சி.ஐ கிடங்கில் நுழைவு வாயில் வேண்டாம்.. கவுன்சிலர்கள் கலெக்டரிடம் மனு

கோவை: கோவை சத்தி சாலையில்  நுகர்வோர் வாணிப கழகத்தின் கிடங்கிற்குச் செல்லும் வழியில் கட்டப்பட்டு வரும் நுழைவாயில் பணிகளை நிறுத்திட வலியுறுத்தி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் சத்தி சாலை பாரதி நகர் அருகே இந்திய உணவுக் கழகத்திற்குச் சொந்தமான உணவு கிடங்கிற்குச் செல்ல சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரப்பாதை உள்ள நிலையில் பாதையைச் சீரமைக்கும் பணிகளை இந்திய உணவுக் கழகம் செய்து வருகிறது 

இந்த நிலையில் சத்தி சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அந்தப் பாதையில் முடியும் இடத்தில் நுழைவாயில் ஒன்று அமைத்து அதில் உணவுக் கழக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வாயில் கதவு அமைய உள்ளதாகத் தெரிகிறது. 

அந்தப் பாதையைக் கோவை மாநகராட்சியின் 20, 26, 28வது வார்டு பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்ல பயன்படுத்தி வருவதாகவும், நுழைவாயில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் அளவிற்குச்  சுற்றிச் செல்ல வேண்டி இருக்கும் அப்பகுதி கவுன்சிலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

எனவே நுழைவாயில் பணிகளை நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 20வது வார்டு கவுன்சிலர் மரியராஜ் 26 வது வார்டு  கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மற்றும் 28 வது வார்டு கவுன்சிலர் கண்ணகி ஜோதிபாசு ஆகியோர் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe