"ஆடி மாசத்துல இப்படி பன்னீட்டீங்களே சார்.?".. ஆதங்கத்தில் காந்திபுரம், டவுன்ஹால் வியாபாரிகள்..!

published 1 year ago

"ஆடி மாசத்துல இப்படி பன்னீட்டீங்களே சார்.?".. ஆதங்கத்தில் காந்திபுரம், டவுன்ஹால் வியாபாரிகள்..!

கோயம்புத்தூர்: மோட்டார் அல்லாத போக்குவரத்து (NMT) வழித்தடப் பணிகள் கோவையில் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம், வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பினால் ஏற்படும் விபத்துகளைத் தவிற்கவும், சாலைகளை பாதசாரிகளுக்கு ஏற்றதாக மாற்றவும், நடைபாதைகள் உருவாக்கத் தொடங்கியது. 

இத்திட்டம் பொதுமக்களாலும் வியாபாரிகளாலும் வரவேற்கப்பட்டது என்றாலும் இப்போது இப்பணிகள் தாமதமாவது வணிகர்களை எரிச்சலடையச் செய்துள்ளது.

புள்ளி விவரங்களின் படி, கோயம்புத்தூர் நகர முனிசிபல் கார்ப்பரேஷன் (சிசிஎம்சி) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 7. 5 கோடி செலவில், டவுன்ஹாலில் உள்ள ராஜ வீதி, பிக் பஜார் மற்றும் காந்திபுரத்தில் கிராஸ்கட் சாலை மற்றும் நஞ்சப்பா சாலை ஆகியவற்றில் நடைபாதை பணிகளைத் தொடங்கியது. இப்பணிகள் ஆறு மாதங்களில் முடிக்கப்பட வேண்டிய நிலையில், இப்போது தாமதமாகி வருகின்றது.

காந்திபுரம் கிராஸ்கட் ரோடு மற்றும் டவுன்ஹாலில் உள்ள ஒப்பணக்கார தெருவில், நடைபாதைப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதால், கடை உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

ஆடி மாதத்தில் துணி மற்றும் நகை கடைகளில் தள்ளுபடி பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபாதை பணிகள் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் கிராஸகட் ரோடு மற்றும் ராஜ வீதி வியாபாரிகள் கடும் மன வருத்தம் அடைந்துள்ளனர்.

கிராஸகட் ரோட்டைச் சேர்ந்த ஆடை வியாபாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எல்லா ஆண்டுகளிலும் துணி வியாபாரத்தில் மிகவும் பரபரப்பான பருவங்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் தற்போது நடைபெற்று வரும் என்எம்டி வழித்தடப் பணிகள் காரணமாக கடைகளுக்குச் செல்ல சரியான பாதை இல்லாததால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை கமிஷனர் எம். பிரதாப், "தற்போது, கிராஸ்கட்டின் ஒரு பக்கத்தில் பேவர் பிளாக் நிறுவும் பணிகளை முழுமையாக முடித்துவிட்டோம், அடுத்த சில வாரங்களில் மறுபக்கத்தை முடிப்போம். முன்னதாக, மின் கம்பங்களை மின்சாரத் துறையினர் மாற்றுவதற்காக நாங்கள் காத்திருந்தோம். எவ்வாறாயினும், இப்போது பிளாக்குகளை அமைக்கத் தொடங்கியுள்ளோம். என்எம்டி திட்டம் இம்மாத இறுதிக்குள் முழுமையாக முடிக்கப்படும்.” என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe