கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் நவீன பிரசவ மையம் துவக்கம்

published 1 year ago

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் நவீன பிரசவ மையம் துவக்கம்

கோவை : கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் இன்று அதிநவீன பிரசவ மையத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மருத்துவமனை ஆவாரம்பாளையத்தை அடுத்த சித்தா புதூர் பகுதியில் உள்ளது. தாய்மை என்பது ஒரு வரப்பிரசாதம் என்பது எந்த காலகட்டத்திலும் மாற்ற முடியாத ஒன்று. இந்த துவக்க விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக  எஸ்என்ஆர் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் லக்ஷ்மி நாராயணசுவாமி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி இம்மையத்தை இனிதே துவக்கி வைத்தார்,

இந்நிகழ்வினை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் சாரதா அவர்கள் கூறுகையில்

கடந்த  40 வருடங்களாக கருவுற்ற பெண்களுக்கு பிரசவம் பார்த்து வருகின்றது நம் ராமகிருஷ்ணா மருத்துவமனை. இப்போது புதியதாக துவங்கப்பட்டுள்ள இந்த மையத்தில், பிரசவத்திற்கு என ஒரு தளம் முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தளமானது தாய்மார்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டும் அல்லாமல்  தங்களது வீட்டில், இருப்பதை போன்றே அனுபவத்தை இங்கு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

கருவுற்ற பெண்களின் சுகப்பிரசவத்திற்கு முக்கியத்துவம் தரக்கூடிய வகையில் நிபுணத்துவம் வாய்ந்த மகளீர், சிகிச்சை மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர்கள், பிஸியோதெரப்பிஸ்டுகள், மயக்க மருத்து நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இருப்பார்கள், அவர்கள் தாய்யிற்கும் உருதுணையாக இருப்பதாக தெரிவித்தார், என்பது குறிப்பிடத்தக்கது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe