நன்னடத்தை அடிப்படையில், கோவை சிறையிலிருந்து 8 கைதிகள் விடுதலை

published 1 year ago

நன்னடத்தை அடிப்படையில், கோவை சிறையிலிருந்து 8 கைதிகள் விடுதலை

கோவை: கோவை மத்திய சிறையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள தண்டனை கைதிகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி  நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். 

அதன்படி இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில், 66 சதவீதம் தண்டனையை அனுபவித்து முடித்த, 15 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து கோவை சிறையில் இருந்த நேசய்யன், பெரியசாமி, அருள்ஜோதி, பிஜேந்திர உரவ், சந்தோஷ்குமார், கோவிந்த உரவ், முத்துவேல், ஆகிய 7 ஆண் கைதிகளும், புஷ்பா என்ற ஒரு பெண் கைதியையும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. 

நேற்று அந்த, 8 பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe