கோவை வந்த  நடிகர் விஜய்தேவர் கொண்டா  : செய்தியாளர்களுடன் கலகலப்பு

published 1 year ago

கோவை வந்த  நடிகர் விஜய்தேவர் கொண்டா  : செய்தியாளர்களுடன் கலகலப்பு

கோவை: இயக்குநர்கள் லோகேஷ், நெல்சன், வெற்றிமாறன் ஆகியோர் சிறந்த இயக்குனர்கள் என்று நடிகர் விஜய்தேவர் கொண்டா கோவையில் பேட்டியளித்துள்ளார்.

இயக்குநர் சிவா நிர்வான இயக்கத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா, நடிகை சமந்தா உட்பட முரளி சர்மா, சச்சின் கதேர், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி என ஏராளமானோர் நடித்துள்ள திரைப்படம் குஷி. இப்படம் செப்டம்பர் 1ம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்து உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இப்படத்திற்காக ப்ரமோசன் பணிகளில் திரைப்பட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

அதன் ஒரு பகுதியாக படத்தின் நடிகர் விஜய் தேவர்கொண்டா கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது: செப்டம்பர் 1ம் தேதி குஷி படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. நானும் சமந்தாவும் நடித்துள்ளோம்.  காதல் கதை சார்ந்த பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகி உள்ளது. இதனை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று காணுங்கள். 

தமிழ் ,தெலுங்கு போன்ற படங்களை பொருத்தவரை பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. தமிழில் விஜய் நடித்த குஷி படமும்  தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த குஷி படமும்  மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது. நீ தானே என் பொன்வந்தம் போன்ற படங்களை பார்த்துள்ளேன். சமந்தாவின் ரசிகன் நான். 

பாகுபலி, புஷ்பா, கே.ஜி.எப் போன்ற படங்கள் மிகப்பெரிய படங்கள். குஷி  குடும்பங்களுடன் வந்து பார்க்கக் கூடிய படமாக அமைந்துள்ளது. தமிழக மக்கள் கண்டிப்பாக  குஷி படத்தில் வரக்கூடிய பாடல்களை ரசிப்பார்கள். ஸ்கிரிப்ட் இருந்தால் நிச்சயம் அடுத்த முறை சமந்தாவுடன் நடிக்க தயாராக உள்ளேன்.

மாவீரன் படம் நேற்றைய தினம் பார்த்தேன். படம் மிகவும் பிடித்தது. சிவ கார்த்திகேயன் சிறப்பாக நடித்துள்ளார். தமிழில் லோகேஷ், நெல்சன் ஆகியோர் சிறந்த இயக்குநர்கள். இயக்குனர் வெற்றிமாறன் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் அனைத்து படங்களும் எனக்குப் பிடிக்கும். 


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe