காவல்துறை- சிறுதுளி சார்பில் கோவையில் காவல் வனம்

published 1 year ago

காவல்துறை- சிறுதுளி சார்பில் கோவையில் காவல் வனம்

கோவை: காவல் வனம் துவக்க விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பங்கேற்று மரக்கன்றுகளை நடவு செய்தார்.

கோவை மாநகர பி.ஆர்.எஸ் மைதானத்தில் காவல் வனம் என்ற பெயரில் மரம் நடும் விழா நடைபெற்றது. 
கோவை மாநகர காவல்துறை மற்றும் சிறுதுளி தன்னார்வ அமைப்பும் சேர்ந்து நடத்திய இவ்விழாவை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இங்கு சுமார் 750 மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பல்வேறு வகையான 750 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இம்மரங்களை பராமரிக்க சிறுதுளி அமைப்பு உதவுகிறது.

ஏற்கனவே 1500 மரங்கள் இவ்வளாகத்தில் இருக்கின்ற நிலையில், அதோடு சேர்த்து இம்மரங்களும் சுற்றுபுற சூழலை மேம்படுத்த உதவும். முதலமைச்சரின் ஆணையின் படி துடியலூர் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் நாளை முதல் கோவை மாநகர காவல்துறையுடன் சேர்க்கப்பட உள்ளது. அக்காவல் நிலையங்களுக்கு கூடுதல் போலீசாரை கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஒழுங்குபடுத்தவும், போக்குவரத்தை சீர் படுத்துவதற்கும் இந்த இணைப்பு உதவியாக இருக்கும்.

மாநகரப் பகுதிகளில் அதிவேகமாகவும், தாறுமாறாக சென்ற சுமார் 500 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேகத்தை கண்டறியும் சென்சார் கருவிகள் பிற இடங்களிலும் விரிவு படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறுதுளி அமைப்பின்  நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், உதவி ஆணையர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe