ஒரு மணி நேரம் வேலை! இவ்ளோ சம்பளமா ? அசத்தும் நிறுவனம் !

published 1 year ago

ஒரு மணி நேரம் வேலை! இவ்ளோ சம்பளமா ? அசத்தும் நிறுவனம் !

என்னதான் ஓடி ஓடி நாள் முழுக்க வேலை பார்த்தாலும், இவர் பார்க்கும் ஒரு மணி நேரம் வேலைக்கு, வாங்கும் சம்பளத்துக்கு ஈடாகாது. இன்றைய காலகட்டம் என்பது ஒரு நாள் கூட லீவு போடாமல் வருடத்திற்கு 365 நாளும் வேலைக்குச் சென்றாலும் நம்மால் சில லட்சங்கள் தான் சம்பாதிக்க முடிகிறது. ஆனால், இவர் பார்க்கும் வேலையோ ஒரு மணி நேரம், வாங்கும் சம்பளமோ 1.2 கோடி ரூபாய்.அப்படி என்ன வேலை? எங்க வேலை பார்க்கிறார் ? யோசிக்கிறீங்களா! அது தாங்க நமது கூகிள் நிறுவனம்.

கூகுள்  நிறுவனம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. எதைத் தேடினாலும் அதற்கான பதில் கூகுள் கிட்ட நமக்குக் கிடைக்கும். கூகுள் நிறுவனத்தின் அங்கமான பேஸ்புக், வாட்ஸ் அப் மக்களிடம் அதிக அளவில் பயன்படுத்தும் ஒன்றாக உள்ளது. இதில் வேலை கிடைப்பது என்பது அனைவரின் கனவு. கூகிள் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் விடை தெரியாத கேள்விக்குப் பதில்.

கூகுளின் இத்தகைய சிறப்புக்குக் காரணம், இந்நிறுவனம் தேர்வு செய்யும் பணியாளர்கள் தான். அப்படிப்பட்ட ஒருவர் தான் இந்த ஒரு மணி நேரம் வேலை செய்பவர்.ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்து அந்த ஒரு மணி நேரத்திற்கு  ரூ.33 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். இவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் - கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்தில், இவரைப் போல ஒருத்தரைப் பார்த்ததில்லை என்று சொல்லலாம்.

இந்த அற்புதத்திற்குரிய நபர் தான் டெவோன். இவர் ஒருவருக்கு மட்டும் கூகுள் நிறுவனம் ஆண்டுக்கு 1.5 லட்சம் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1 கோடியே 20 லட்சம் ரூபாயைச் சம்பளமாக வழங்கி வருகிறது. இவர் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வேலை பார்ப்பவர் இல்லை. இது பற்றி இவர் கூறுகையில், என்னுடைய வேலை கணினி குறியீடு(கோடிங்) எழுதுவதுதான். நான் காலையில் அல்லது மாலையில் தான் வேலை பார்ப்பேன். ஆனால், அன்றைக்கான வேலையை ஒரு மணி நேரத்தில் செய்து விடுவேன் என்று கூறுகிறார்.

ஹார்ட் ஒர்க் செய்வதே விட, ஸ்மார்ட் ஒர்க் செய்து அசத்துகிறார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe