கோவையில் நொய்யல் நதியை காப்பற்ற நடனம் ஆடிய பெண்கள்.

published 1 year ago

கோவையில் நொய்யல் நதியை காப்பற்ற நடனம் ஆடிய பெண்கள்.

கோவை : கோவையில் நொய்யல் திருவிழாவை ஒட்டி பேரூர் படித்துறையில் ஆரத்தி எடுத்தல் மற்றும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கள் நடைபெற்று வருகின்றது.

இதன் துவக்க விழா முன்னிட்டு  தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் கும்மியாட்டம் மற்றும் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றம் நடைபெற்றது.பார்வையாளர்களை மிகுந்த கவனத்தில் ஈர்த்ததில் கொங்கு மண்டலத்தில் மிகச் சிறப்பான நடனமாக கருதப்படும்   பெருசலங்கை நடனம் முருக கடவுளின் காவடி சிந்து  பாடலுக்கு பெண்கள் அணிவகுத்து ஆடியது அனைவரும் கவர்ந்தது

.

மேலும் நொய்யல் திருவிழா முடியும் வரை பல்வேறு கலை நிகழ்ச்சியில் நடைபெறவிருப்பதாகவும் பல்வேறு தலைப்புகளில் முக்கியஸ்தர்கள் வந்து உரையாற்றுவார்கள் அதன் மூலமாக நொய்யலை மீட்டெடுக்க நிகழ்ச்சிகளை நடத்தப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நல்லறம் அமைப்பு தலைவர் அன்பரசன்,தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார்,மாதம்பட்டி தங்கவேலு,ரோட்டரி மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe