கோவை மேயர் கல்பனாவின் குடும்பத்தினர் மீது பெண் பரபரப்பு புகார்

published 1 year ago

கோவை மேயர் கல்பனாவின் குடும்பத்தினர் மீது பெண் பரபரப்பு புகார்

கோவை: வீட்டை காலி செய்ய வைக்க கோவை மாநகராட்சி மேயர் குடும்பத்தினர் அருவறுக்கத்தக்க முறையில் டார்ச்சர் செய்வதாக பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்

கோவை மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள  நட்சத்திரா கார்டனின் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் சரண்யா கோபிநாத் தம்பதியினர்.

இவர்கள் குடியிருக்கும் காம்பவுண்ட்டில் அண்டை வீட்டில் வசித்து வருபவர்கள் கோவை மாநகராட்சி மேயரின் தாயார் காளியம்மாள் மற்றும் தம்பி குமார்.

குமார், கோபிநாத்திடம்  கடந்த சில மாதங்களுக்கு முன் 15,000 ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படும் நிலையில் அதில் 5000 ரூபாயை மட்டுமே திருப்பி தந்ததாகவும், மேயர் கல்பான ஆன்ந்த்குமார் மேயாராக பொறுப்பேற்றதில் இருந்து மீதி தொகையை தரவில்லை என சரண்யாக கூறுகிறார். 

இந்நிலையில் மேயர் கல்பனா ஆன்ந்த்குமார் அரசு குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக குமார் வீட்டில் தங்கி இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் தான் வசித்து வரும் வீட்டை காலி செய்ய வைக்க மேயரின் தம்பி குமார் பல்வேறு விதங்களில் டார்ச்சர் செய்வதாகவும், தங்கள் வீட்டின் பின்னால் அழுகிய பழங்கள், கோழி இறைச்சிகள், உள்ளிட்டவற்றை குமார் வீசி செல்வதாகவும்,   அருவறுக்கத்தக்க வகையில் சிறுநீரை டப்பாவில் பிடித்து வந்து தங்கள் வீட்டின் சமையறை பகுதியில் ஊற்றி செல்வதாகவும், பூசணிக்காய், எலுமிச்சை இவற்றை கொண்டு மாந்திரிகம் போன்ற பில்லி சூனியம் போன்றொல்லாம் செய்து வைத்து தொந்தரவு அளிப்பதாக சரண்யா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் தங்களது வாகனங்களை வெளியே எடுக்க முடியாதவாறு அவர்களது வாகனங்களை நிறுத்தி விடுவதாகவும் கூறினார். மேலும் இவற்றையெல்லாம் கேமரா மூலம் பதிவு செய்துள்ள நிலையில் அவற்றையும் சரண்யா வெளியிட்டுள்ளார்.

இதனிடையே வீடியோ பதிவு செய்தது தெரிந்து குமார் மற்றும் சில ஆட்கள் தங்களை மிரட்டுவதாகவும் சரண்யா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தங்களுக்கு உயிர்பாதுகாப்பு வேண்டுமென கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்துள்ளார். மேலும் மேயர் குடியிருந்த ஆர்.எஸ்.புரம் அரசு குடியிருப்பில் அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்ததாக தெரிகிறது எனவும் அதனால் அவர் மீண்டும் இங்கேயே வந்துவிட்டதாக சரண்யா கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe