கோவையில் மாவட்ட வள பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

published 1 year ago

கோவையில் மாவட்ட வள பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை:  கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வாழ்வாதாரம் திட்டத்தின் கீழ் ஒரு மாவட்ட வள பயிற்றுநர் (Non Farm) காலிப்பணியிடம் உள்ளது. இப்பணியிடம் மாவட்ட அளவில் கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். கீழ்க்கண்ட கல்வி மற்றும் அனுபவ தகுதிகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாவட்ட வள பயிற்றுநர் பணிநியமனத்திற்கான நெறிமுறைகள்:

காலிப்பணியிடம் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரப்பெற்றவுடன், மாநில அளவில் கல்வி மற்றும் அனுபவ தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

மாவட்ட வள பயிற்றுநர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதி அளவுகோல்கள்:

கல்வி மற்றும் அனுபவ விவரங்கள்

> சமூகப்பணி, (MSW) அல்லது வணிக மேலாண்மை (MBA) அல்லது ஊரக வளர்ச்சி (Rural Development) ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 2 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊரக பகுதியில் பணியாற்றுவதற்கு தமிழில் புலமை மிக்கவராக இருக்க வேண்டும். அலுவலக தொடர்புக்கு ஆங்கில புலமை மிக்கவராக இருக்க வேண்டும்.

கணினி இயக்குபவராக இருக்க வேண்டும்.

மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் 15.09.2023 தேதிக்குள் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 2-வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், கோயம்புத்தூர் 641 018 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe