கோவை இஸ்கானில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி : நிகழ்ச்சிகள் முழு விவரம்

published 1 year ago

கோவை இஸ்கானில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி :   நிகழ்ச்சிகள் முழு விவரம்

கோவை: உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும், ஸ்ரீகிருஷ்ணரின் அவதார தினம், கோவை மாநகரில் கொடிசியா வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீஜெகந்நாதர் (ஹரே கிருஷ்ணா) ஆலயத்தில், செப்டம்பர் 6, 7 மற்றும் 8  தேதிகளில்  கொண்டாடப்படுகிறது.

இஸ்கான் அமைப்பின்  மூத்த தலைவர்  தவத்திரு  பக்தி வினோத சுவாமி மகராஜ் அவர்களின்  தலைமையில் நடைபெறும் இந்த மூன்று நாள்  கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

நிகழ்ச்சிகள் விபரம்

அதிகாலை 4.15 முதல்  நள்ளிரவு வரை சிறப்பு ஆராதனை, அகண்ட நாம சங்கீர்த்தனம், பகவான் கிருஷ்ணரின் லீலைகள் குறித்த சொற்பொழிவுகள்,     பாலகோபாலருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு வழிபாடுகள், கோபூஜை, பகவான் ஜெகன்னாதருக்கு தீபராதனை, கலைநிகழ்ச்சிகள், அஷ்டோத்திர  மகா   கலசாபிஷேகம் மற்றும் அன்னதானம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தவத்திரு  பக்தி வினோத  சுவாமி மகராஜ் பாகவதம் உபன்யாசம் அளிப்பதுடன் ஸ்ரீ கிருஷ்ணரின் தோற்றம்  மற்றும் உன்னதமான லீலைகளைப் பற்றி ஆன்மீக  சொற்பொழிவு அளிக்க உள்ளார். “நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்”, “வாயினால் பாடி மனதினால் சிந்திக்க” மற்றும் “குறையொன்றுமில்லை மறை  மூர்த்தி கண்ணா”  ஆகிய தலைப்புகளில்  மூத்த பக்தர்கள் ஆன்மீக சொற்பொழிவு ஆற்ற உள்ளனர்.  

பக்குவமான கேள்விகளும் பக்குவமான பதில்களும்  என்ற தலைப்பில்  ஆன்மீக கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.  குழந்தைகள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி, கோவை சந்திரா குழுவினரின் நாடகம், சிறப்பு பட்டிமன்றம், மற்றும் உரியடி  நிகழ்ச்சிகள்  கிருஷ்ண ஜெயந்தி விழாவை சிறப்பிக்க உள்ளன.

செப்டம்பர் 6 மற்றும் 7 நாள் தேதிகளில் முழுவதும் தரிசனத்துக்காக கோவில் திறந்தேயிருக்கும். அது சமயம் பக்தர்களனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரின் பேரருளை பெறுமாறு இஸ்கான் அமைப்பினர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த விழாவுக்கு வரும்  அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்க  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  


ஸ்ரீல பிரபுபாதரின் தோன்றிய நாள் விழா

செப்டம்பர் 8ஆம் தேதி காலை 9.30 மணி முதல் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சரியாரான ஸ்ரீல பிரபுபாதரின் தோன்றிய நாள் விழாவும் (வியாச பூஜை) அதைத் தொடர்ந்து நந்தோத்சவ பிரசாத விருந்தும் நடைபெறவுள்ளன.

மேலும் தகவல்களுக்கு பின்வரும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம். 7708358616.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe