கோவை குழந்தைகளிடம் கணிதத்தை எளிதாக்க வருகிறது கணித பூங்கா!

published 1 year ago

கோவை குழந்தைகளிடம் கணிதத்தை எளிதாக்க வருகிறது கணித பூங்கா!

கோவை : கோவை வ.உ.சி பார்க் வளாகத்தில் 50 சென்ட் நிலப்பரப்பில் ரூ.60 லட்சம் மதிப்பில் கணித மேதை ராமானுஜர் பெயரில் கணித பூங்கா ஒன்றை அமைத்திட கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கணிதத்தை எளிதாக குழந்தைகளிடம் விளக்கக்கூடிய உபகரணங்கள் மற்றும் எளிய வழிமுறைகளை கொண்ட பல அம்சங்கள் இந்த கணித பூங்காவில் இடம் பெறும் என மாநகராட்சி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான டெண்டர் விரைவில் கோரப்பட உள்ளது.

வ.உ.சி பூங்கா பகுதியில் விளையாட குழந்தைகள் நூற்றுக்கணக்கான பேர் ஒவ்வொரு வார இறுதியிலும் வருவது வழக்கம். இப்படிப்பட்ட ஒரு கணித பூங்கா வரும் பட்சத்தில் கணிதத்தை கஷ்டம் என்று நினைக்கும் குழந்தைகள் மனதில் கணிதம் விரும்பும்படியான ஒரு பாடமாக மாறும் என கருதப்படுகிறது.

அண்மையில் கோயம்புத்தூர் மாநகராட்சி டாடாபாத், அழகப்பா செட்டியார் சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 சென்ட் பரப்பளவு கொண்ட இடத்தில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது அடுத்த கட்டமாக கணித பூங்காவும் வரவுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe