12 ராசிகளுக்குமான இன்றைய (11ம் தேதி ) ராசிபலன்
மேஷம்
வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களில் இழுபறிகள் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்
அஸ்வினி : பொறுமை வேண்டும்.
பரணி : சிந்தித்துச் செயல்படவும்.
கிருத்திகை : அனுபவம் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். ஆரோக்கியப் பிரச்சனைகள் குறையும். பயனற்ற விவாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். எதிலும் நடுநிலைமையுடன் செயல்பட்டு ஆதரவுகளை உருவாக்கிக் கொள்வீர்கள். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : முடிவு கிடைக்கும்.
ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : வரவுகள் கிடைக்கும்.
திருவாதிரை : விவேகத்துடன் செயல்படவும்.
புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
கடகம்
பழைய நண்பர்களின் சந்திப்புகள் இனிமையான தருணங்களை உண்டாக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துகள் கூறுவதைத் தவிர்க்கவும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : இனிமையான நாள்.
பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
ஆயில்யம் : குழப்பம் மறையும்.
---------------------------------------
சிம்மம்
உத்தியோக பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபார ரீதியான பொருளாதார பிரச்சனைகள் குறையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். எதிர்பாராத சில தடைகளின் மூலம் காலதாமதம் உண்டாகும். விலகிச் சென்றவர்களைப் பற்றிய எண்ணங்கள் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : ஏற்ற, இறக்கமான நாள்.
பூரம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திரம் : தாமதம் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
பொதுக் காரியங்களில் மேன்மை உண்டாகும். சிந்தனைகளில் ஒருவிதமான குழப்பம் தோன்றி மறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். கலை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நுட்பமான விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : மேன்மை உண்டாகும்.
அஸ்தம் : தெளிவு பிறக்கும்.
சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
துலாம்
பிள்ளைகளால் சுபச்செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். தொழில் சார்ந்த துறைகளில் புதிய விஷயங்களை அறிவீர்கள். உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பொறுமையுடன் செயல்பட்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : செலவுகள் ஏற்படும்.
சுவாதி : மந்தநிலை குறையும்.
விசாகம் : ஆதரவான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் ஈடேறும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஞாபக மறதி அவ்வப்போது தோன்றி மறையும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனை கிடைக்கும். இயற்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.
அனுஷம் : அனுகூலம் உண்டாகும்.
கேட்டை : ஆலோசனை கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தநிலை ஏற்படும். பத்திரம் தொடர்பான செயல்களில் நிதானம் வேண்டும். பயனற்ற வாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் மனதில் அமைதி உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். செய்யும் முயற்சிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். தனவரவுகளில் சுமாரான சூழல் அமையும். அனுபவம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
உத்திராடம் : மாற்றமான நாள்.
---------------------------------------
மகரம்
எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்ப்புகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : நெருக்கடிகள் குறையும்.
திருவோணம் : அறிமுகம் ஏற்படும்.
அவிட்டம் : சாதகமான நாள்.
---------------------------------------
கும்பம்
பழைய நினைவுகளின் மூலம் முகத்தில் ஒருவிதமான சோர்வு வெளிப்படும். முக்கியமான பொருட்களை நிதானத்துடன் கையாள்வது நல்லது. போட்டிகளில் இருந்துவந்த தயக்கம் குறையும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் ஏற்படும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். கடன் விஷயங்களைப் பொறுமையுடன் கையாளவும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : சோர்வு வெளிப்படும்.
சதயம் : தயக்கம் குறையும்.
பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
---------------------------------------
மீனம்
பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மை ஏற்படும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். தனவருவாயை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளுடன் பொழுதுகளை செலவு செய்து மனம் மகிழ்வீர்கள். பிறமொழி தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : மேன்மை ஏற்படும்.
உத்திரட்டாதி : கண்ணோட்டம் பிறக்கும்.
ரேவதி : ஈடுபாடு ஏற்படும்.
---------------------------------------