இங்கு குடியிருக்கவே பயமாக இருக்கிறது... அலறியடித்துக் கொண்டு காவல் நிலையம் வந்த ரத்தினபுரி பெண்கள்..!

published 1 year ago

இங்கு குடியிருக்கவே பயமாக இருக்கிறது... அலறியடித்துக் கொண்டு காவல் நிலையம் வந்த ரத்தினபுரி பெண்கள்..!

கோவை: கடந்த 15 நாட்களில் 7க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பதாக கூறி ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மக்கள் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

கோவை ரத்தினபுரியை அடுத்த ஜி.பி.எம் நகர், பூம்புகார் நகர், சேவா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து ரத்தினபுரி காவல் நிலையத்தில்  புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:

ரத்தினபுரி சுற்றுவட்டாரத்தில் கடந்த 15 நாட்களாக 7க்கும் மேற்பட்ட வீடுகளில் கதவை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

நேற்று பகலிலேயே ஒரு வீட்டில் கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டு இருக்கிறது. இந்தப் பகுதியில் வசித்து வரும் எங்களுக்கு இந்த தொடர் சம்பவங்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு தனியாக சென்ற பெண்ணிடம் காலை 6 மணி அளவில் நகை பறிப்பு முயற்சியும்  நடந்திருக்கிறது.

இங்கு குடியிருக்கவே பயப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. எனவே குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவர் அந்த மனுவில் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe