அக்டோபர் 31ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை- மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு…

published 1 year ago

அக்டோபர் 31ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை- மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு…

கோவை: கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை 31.10.2023க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24ம் ஆண்டின் இரண்டாம்
அரையாண்டிற்கான சொத்துவரியினை 31.10.2023க்குள் செலுத்தும் சொத்து
உரிமையாளர்களுக்கு சொத்துவரி தொகையில்
சதவீதம் ஊக்கத்தொகை
வழங்கப்படும் எனவும் மேற்படி சொத்துவரி தொகையினை ரொக்கம், கடன் மற்றும் பற்று அட்டை காசோலை மற்றும் வரைவோலை மூலமாக மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களிலும், மேலும் tnurbunepay.tn.gov.in என்ற நகராட்சி நிர்வாக இயக்குநரக இணையதள டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவும் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் மேற்காணும் வசதியினை,
முழுமையாக
பயன்படுத்தி, 2023-24ம் ஆண்டின் இரண்டாம்
அரையாண்டிற்கான  சொத்துவரியினை அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் வரை ஊக்கத்தொகையினை பெற்று பயனடையுமாறு 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe