மின் இணைப்பு பெயர் மாற்று சிறப்பு முகாமை நீட்டிக்க கோரிக்கை...

published 1 year ago

மின் இணைப்பு பெயர் மாற்று சிறப்பு முகாமை நீட்டிக்க கோரிக்கை...

கோவை: மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் கால அவகாசம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வீடு மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய மின் வாரிய இணையத்தில் விண்ணப்பித்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்து கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது.

இந்நிலையில், இதில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு அலுவலகத்தில் கட்டணம் செலுத்திய அன்றே பெயர்மாற்றம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடத்தியது. ஒரு மாதம் நடந்த இந்த சிறப்பு முகாம் பின்னர் இன்று வரை நீட்டிக்கப்பட்டது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. விற்பனை காரணமாக பெயர் மாற்றம் செய்ய விரும்புபவர்கள் ஆதார் அட்டை, சொத்து வரி ரசீது நகல், விற்பனை பத்திர நகல் ஆகியவை ஆவணங்களாக கோரப்பட்டிருந்தன. .
மேலும் மின் இணைப்பு அட்டையில் பெயர் உள்ளவர்கள் இறந்து விட்டால் பெயர் மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ், செட்டில்மென்ட் பத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஜூலை மாதம் துவங்கப்பட்ட இந்த சிறப்பு முகாம் நீட்டிக்கப்பட்டு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் இந்த சிறப்பு முகாமுக்கு கால அவகாசத்தை மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘கோவையில் பீளமேடு, உக்கடம், போத்தனூர், குறிச்சி, கோவைப்புதூர், குனியமுத்தூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மின் வாரிய அலுவலகத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. ஆனால் இந்த மாதம் கிருஷ்ண ஜெயந்தி, விநாகர் சதுர்த்தி, வார விடுமுறை என தொடர்ந்து வந்ததால் இன்னும் பலர் இந்த சிறப்பு முகாமில் முழுமையாக பயன்பெற முடியவில்லை. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய மேலும் ஒரு மாத காலம் இந்த சிறப்பு முகாமை நீட்டிக்க வேண்டும்’’ என்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe