அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி- விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு…

published 1 year ago

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி- விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு…

கோவை: அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டியானது வரும் 7ம் நடத்தப்பட உள்ள நிலையில் அதற்காக விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், பொது மக்களிடையே உடன் தகுதி கலாச்சாரத்தை புதுப்பிக்கும் வண்ணம் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டியானது ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் நிலையில் இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் வருகின்ற 07.10.2023 தேதி நடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன் துவங்கி எல்ஐசி அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு விளையாட்டு அரங்கை வந்தடையுமாறு இந்த ஓட்ட போட்டியானது நடத்தப்பட உள்ளது.

இப்போட்டியில் 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கிலோமீட்டர் பெண்களுக்கு 5 கிலோமீட்டர், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் பெண்களுக்கு 5 கிலோமீட்டர் என நடத்தப்பட உள்ளது. 
இப்போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களது வயது சான்றிதழ் வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் சான்றிதழ்களை 06.10.2023 தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் முதல் பரிசாக 5000 ரூபாய் இரண்டாம்  பரிசாக 3000 ரூபாய் மூன்றாம் பரிசாக 2000 ரூபாய் நான்கு முதல் பத்து இடங்களில் வருபவர்களுக்கு தலா 1000 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe