தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும்- பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர்...

published 1 year ago

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும்- பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர்...

கோவை: தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய கூட்டமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி, நீண்ட காலமாக சாதி வாரி கணக்கெடுப்பு இல்லாத காரணத்தால்,பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு மத்திய மாநில அரசு கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் 40 ஆண்டு காலமாக இட ஒதுக்கீடு இல்லை என  தெரிவித்தார். பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு இடையே 1992 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை உச்ச நீதி மன்ற அரசியல் சாசன அமர்வு உறுதி செய்தும்,இன்று வரை மத்திய அரசு பணிகளில்,18 சதவீதத்திற்கும் குறைவான அரசு பணியிடங்களே வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்ற அறவிப்பும் பொய்யான நிலையில்,மத்திய அரசு சார்பாக சாதி வாரி கணக்கெடுப்பை கை விட்டு விட்டதாக உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது,  இந்நிலையில் பீகார் மாநில அரசு சமூக நீதியை உறுதி செய்யும் வகையில் மாற்றுக் கட்சியினர் மற்றும் அமைப்புகள் ஏற்படுத்திய தடைகளை தகர்த்தெறிந்து வெற்றிகரமாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளனர். 

மேலும் ஒரிசா உட்பட பல மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுக்க முடிவு செய்துள்ளனர் இந்த நிலையில் சமூக நீதியை முன்னெடுத்த முதல் மாநிலமான தமிழகம் ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க தாமதம் செய்வதும் தவிர்க்க முயல்வதும் பிற்படுத்தப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு மற்றும் சமூக நீதி கூட்டமைப்பு ஆகியவற்றின் ஒரே கோரிக்கை மாநில மற்றும் மத்திய அரசுகள் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க முன்வர வேண்டும் என்பதே என கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் புறக்கணிக்குமேயானால் இந்த மாத இறுதியில் அரசியல் சார்பில்லாத அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாய அமைப்புகள் கூட்டத்தைக் கூட்டி தொடர் போராட்ட நடவடிக்கைகளை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe