ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

published 1 year ago

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு  சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

கோவை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு  சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளதாக  மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவத் தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி (Common Law Admission Test) இலவசமாக வழங்கப்படடுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "இப்பயிற்சியினை பெற 15 முதல் 25 வயது நிரம்பிய பன்னிரெண்டாம் வகுப்பு
முடித்த மாணாக்கர்கள் மற்றும் நடப்பாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும்
முறை இணையதளம் வழியாகவும் தேர்வு நடைபெறும் முறை நேரிடையாகவும் நடைபெறும்.
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணாக்கர்களுக்கும் சட்டப்படிப்பு படிப்பதற்கு ஏனைய நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். பொது நுழைவுத் தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி (Common Law Admission Test) வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நேர்வுகளான, நேர்காணல்(Interview), குழு விவாதம், எழுத்துத் தேர்வு ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் வழங்கப்படும். இந்த தேர்விற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் பயிற்சி www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe