செறிவூட்டப்பட்ட அரிசி தண்ணீரில் மிதக்க காரணம் என்ன- மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

published 1 year ago

செறிவூட்டப்பட்ட அரிசி தண்ணீரில் மிதக்க காரணம் என்ன- மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

கோவை: செறிவூட்டப்பட்ட அரிசியை சமைப்பதற்கு தண்ணீரில் ஊறவைக்கும் போது சில அரிசிகள் மிதந்தால் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அதற்கான விளக்கத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"கோவை மாவட்டத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கடந்த மே மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியின் விகிதாசாரமானது 1:100 விகிதத்தில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி குருணைகளை 100 கிலோ பொது விநியோகத்திட்ட புழுங்கல் மற்றும் பச்சரிசியுடன் கலந்து விநியோகம் செய்யப்படுகிறது. மாவாக அரைக்கப்பட்ட அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம், வைட்டமின் -பி12 ஆகியவை கலந்து திரும்ப அரிசி குருணை வடிவில் செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள இரும்பு சத்தினால் இரத்த சோகையினைத் தடுக்கவும், போலிக் அமிலம் கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திற்கும், வைட்டமின்-பி12-ல் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கும் நன்மை ஏற்படுத்துகிறது.

மேற்படி செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்பட்ட பொதுவிநியோகத்திட்ட அரிசி சமைப்பதற்கு தண்ணீரில் ஊற வைக்கும் போது, செறிவூட்டப்பட்ட அரிசி சில தண்ணீரில் மிதப்பதால் பொதுமக்கள் எவரும் அச்சப்பட தேவையில்லை. இவை அடர்த்தி மற்றும் எடை குறைவு காரணமாகதான் மிதக்கின்றன. எனவே, இவை ஊட்டசத்து நிறைந்தவை என்பதால் அனைவரும் பயன்படுத்தலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe