கோவை-அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றம்

published 1 year ago

கோவை-அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றம்

கோவை: கோவை அவினாசி சாலையில் மேம்பால பணிகள் காரணமாக இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்..

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள விவரம் :


அவினாசி சாலையில் உள்ள LIC சந்திப்பு முதல் JM Bakery வரை மேம்பாலம் பணி மற்றும் பாதாள சாக்கடை பணி நடைபெற உள்ளதால்

கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது:

அவினாசி ரோடு பழைய மேம்பாலத்திலிருந்து (Old flyover), அண்ணாசிலை நோக்கி செல்லும் வாகனங்கள், நஞ்சப்பா ரோடு வழியாக சென்று Park Gate Roundana வலது புறம் திரும்பி, Stanes School வழியாக, LIC சிக்னல் அடைந்து அவினாசி சாலையில் செல்லலாம்

அல்லது JM பேக்கரியில் வலது புறம் திரும்பி ரெட் கிராஸ், ஓசூர் சாலை வழியாக LIC சிக்னல் அடைந்து வலதுபுறம் திரும்பி செல்லலாம்.

> அண்ணா சிலை சந்திப்பில் இருந்து பழைய மேம்பாலம் (Old flyover) செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி KG Hospital, Red cross, JM Bakery வழியாக பழைய மேம்பாலம் (Old flyover) சென்றடையலாம்.

> அண்ணா சிலை சந்திப்பில் இருந்து காந்திபுரம் செல்லும் வாகனங்கள் வலது புறம் திரும்பி டாக்டர் பாலசுந்தரம் ரோடு, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக காந்திபுரம் செல்லலாம். அவிநாசி மார்க்கத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் வரும்

பேருந்துகள், அண்ணா சிலை வலதுபுறம் திரும்பி டாக்டர் பாலசுந்தரம்

சாலை, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக அல்லது லட்சுமி

மில்ஸ், பாப்பநாயக்கன்பாளையம், மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்லலாம்

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அவிநாசி சாலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள், மகளிர் பாலிடெக்னிக் பாப்பநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ் வழியாக செல்லலாம். கல்லூரி, மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சிமார்க்கமாக செல்லும் வாகனங்கள் பார்க் கேட், எல்.ஐ.சி, அண்ணாசிலை, ரேஸ்கோர்ஸ் வழியாக செல்லலாம்.

திருச்சி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ரேஸ்கோர்ஸ், எல்.ஐ.சி, பார்க் கேட் வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்லலாம்.

மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe