கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் விவசாய நிலங்கள் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுகிறது- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு...

published 1 year ago

கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் விவசாய நிலங்கள் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுகிறது- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு...

கோவை: கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் விவசாய நிலங்கள் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதி கோட்டூர் மலையாண்டி பட்டினம், மதிப்பாதை வழிதடத்தில் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக விவசாய நிலம் மற்றும் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதாகவும் இதனால் விவசாயம் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாகவும், கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.  

மேலும் இது சம்பந்தமாக மாவட்ட வருவாய் அலுவலர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு இவ்விடத்தில் குப்பைகளை கொட்ட கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவது சிமெண்ட் கால்கள் கட்டி இடையூறு செய்து வருவதாகவும் இத்தகைய செயல்களை தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe