செட்டிப்பாளையம் பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் துவக்கி வைப்பு...

published 1 year ago

செட்டிப்பாளையம் பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் துவக்கி வைப்பு...

கோவை: செட்டிப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மெஸ்ஸர் கட்டிங் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் ரூ.25 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த மெஸ்ஸர் கட்டிங் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியின் மூலம் ரூ.25 இலட்சம் மதிப்பில் தடையில்லா மின்சார வசதி, நிலத்தடி நீர் வசதி, ஆரம்ப சுகாதார நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட சுகாதாரத்திற்காக அரை ஏக்கர் பரப்பளவிற்கு சுற்றுச்சுவர் ஆகிய வசதிகள் நிறுவப்பட்டுள்ளதை தொடர்ந்து, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) அருணா, மெஸ்ஸூரி கட்டிங் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மணி நாராயணன் . ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe