பண்டிகைகளை முன்னிட்டு கோவையில் இத்தனை கூடுதல் சிறப்பு பேருந்துகளா!

published 1 year ago

பண்டிகைகளை முன்னிட்டு கோவையில் இத்தனை கூடுதல் சிறப்பு பேருந்துகளா!

கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிட், சார்பில் கோவையிலிருந்து மதுரை, திருச்சி ஆகிய ஊர்களுக்கு -220 பேருந்துகள் இயக்கப்படும் என மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்தான அறிக்கையில்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிட். சார்பில் வருகின்ற 20.10.2023 முதல் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக வார இறுதி நாட்கள், ஆயுத பூஜை. சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி ஆகிய விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதால் கோவையிலிருந்து சேலம், உதகை மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு 220 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோவை - காந்திபுரத்திலிருந்து சேலத்திற்கு- 70 பேருந்துகள், உதகைக்கு 20 பேருந்துகள், சிங்காநல்லூரிலிருந்து மதுரைக்கு - 50 பேருந்துகள், திருச்சிக்கு - 50 பேருந்துகள், தேனிக்கு -20 பேருந்துகள், திண்டுக்கல்லுக்கு -10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் தேவைப்படும் போது கூடுதலாக பொது மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் விடுமுறை முடிந்த பிறகு பொதுமக்கள் மீண்டும் அவரவர் ஊர்களிலிருந்து திரும்பி வர ஏதுவான வகையில் மேற்படி ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe