மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், வேலை நிறுத்த போராட்டம்…

published 1 year ago

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், வேலை நிறுத்த போராட்டம்…

கோவை: மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 7500 ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த ஒப்பந்த பணியாளர்கள் அனைவருக்கும் 721 ரூபாய் சம்பளம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 2023-24 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ஆட்சியர் அறிவிக்கின்ற சம்பளத்தை இதுவரை தரவில்லை என்றும் நீண்ட நாட்களாக ஒப்பந்த பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள், கிளீனர்கள் அனைவருக்குமே எவ்விதமான சம்பளமும் நியமனம் செய்யாத காரணத்தினால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கோவை மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்கம் சார்பாக கோவை வஉசி மைதானத்தில் தற்போது காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த காத்திருப்பு போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ல் கலந்து கொண்டுள்ளார்கள். இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி வழங்கக்கூடிய சம்பளத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தங்களது பிரதான கோரிக்கையாக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe