ஆளுனர் பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்பு கொடி வீசி ஆர்ப்பாட்டம்.

published 2 years ago

ஆளுனர் பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்பு கொடி வீசி ஆர்ப்பாட்டம்.

தருமபுரம் ஆதின நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற ஆளுனர் பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்பு கொடி வீசி ஆர்ப்பாட்டம்.

அண்ணாமலை பல்கலைக்கழக பட்டம் அளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தமிழக  ஆளுனர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவில் கலந்து கொள்ளும் 27வது தருமபுர ஆதீனம் இன்று யாத்திரை மேற்கொள்ள உள்ள நிகழ்ச்சியை துவக்கி வைக்க ஆளுனர் ரவி சென்றபோது நீட் தேர்வு மசோதா,ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட 18 மசோதாக்களை முடக்கி உள்ள ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்ட ஆளுனரை நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பதை கண்டித்து திராவிடர் கழகம்,திராவிடர் விடுதலை கழகம்,விடுதலை சிறுத்தைகள்,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிய கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்புக் கொடியை ஏந்தியபடி ஆளுநருக்கு எதிராக பதாகைகளை பிடித்து கோஷங்களை எழுப்பியவர்கள் ஆளுநர் மன்னம்பந்தல் பகுதியை கடந்து செல்லும் போது போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.தொடர்ந்து ஆளுநர் பின்னால் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை வீசி எறிந்து பதாதைகளை சாலையில் தூக்கி வீசியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.ஆளுனருக்கு கருப்பு காட்ட முயன்ற போராட்டத்தில் ஈடுபட்ட 150 மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe