பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு…

published 1 year ago

பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின் வாயிலாக, பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு 2222 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு தேர்வு 07.01.2024 அன்று நடைபெறவுள்ளது எனவும் இத்தேர்வுக்கு இணையதள (http//www.trbtn.gov.in) முகவரி வாயிலாக 01.11.2023 முதல் 30.11.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தமிழ், ஆங்கிலம், கணிதம் இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல் வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று BED யில் 50% மேல் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி மற்றும் TNTET PAPER II (Teacher Eligihility Test Certificate) பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு 53 (பொதுப் பிரிவினர்) 58(இட ஒதுக்கீட்டில் அடங்கும் ஆதரவற்ற விதவை உட்பட அனைத்து பிரிவினருக்கும்). இதர தகுதிகளின் விவரங்களை (http//www.trb.tn.gov.in என்ற இணையதன் முகவரியில் பார்த்து விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்விற்கு உதவும் வகையில் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் SmartBoard, இலவச Wifi வசதி, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை நாள்தோறும் சிறுதேர்வுகள் (Spot test); வாரத்தேர்வுகள் முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.

இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளதால் 10.11.2023 தேதிக்குள் நேரிலோ அல்லது Google Link https//formsgle:FNHXWviuCaGtAoL.B வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மனுதாரர்கள் மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe