விலை உயர்ந்த பொருட்களை வீடுகளில் வைக்காதீர்கள்.. கோவை போலீசார் வேண்டுகோள்.

published 1 year ago

விலை உயர்ந்த பொருட்களை வீடுகளில் வைக்காதீர்கள்.. கோவை போலீசார் வேண்டுகோள்.

கோவை: தீபாவளி நேரத்தில் வீட்டில் உள்ள பொருட்களை திருடி செல்லும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் வீடுகளில் விலை உயர்ந்த நகை மற்றும் ரொக்கம் ஆகியவற்றை வைப்பதை தவிர்க்க வேண்டும் என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் வரும், 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்கள் வீடுகளில் அதிக அளவு பணப்புழக்கம் இருக்கும். இது போன்ற சூழ்நிலைகளில் எச்சரிக்கையாக இருந்து, தங்களுடைய நகை, பணம் ஆகியவற்றை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என, போலீசார் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

துடியலூர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் சப் டிவிசனுக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், சின்ன தடாகம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும்போது, போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனால் வீட்டின் உரிமையாளர்கள் திரும்பி வரும் வரை, அந்த வீட்டில் குற்றம் ஏதும் நடக்காமல் போலீசார் கண்காணிப்புபணியில் ஈடுபடுவர்.வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள், தங்க நகைகள் ஆகியவற்றை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

பெண்கள், வயதானவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் அல்லது வாக்கிங் செல்லும் போது, கழுத்தில் விலை உயர்ந்த தங்க நகைகளை அணிந்து செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.வீடு தேடி வந்து விற்பனை செய்யும் பொருட்களை, வாங்குவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பொருட்கள் விற்பது போல வீட்டை நோட்டம் விட்டு பின், ஆள் இருக்கும்போதும், இல்லாத போதும் கொள்ளையடித்து செல்லும் முயற்சிகள் நடக்கலாம்.வீட்டை பூட்டிவிட்டு வெளியேசெல்லும்போது, ஒரு நபரை கண்டிப்பாக காவலுக்கு வைக்க வேண்டும்.

அப்படி தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டால், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.60 வயதுக்கு மேலான வயதானவர்கள், தனியாக வீட்டில் வசித்தால் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களின் தேவைகளை கண்காணித்து, போலீஸ் ஸ்டேஷன் வாயிலாக உதவிகள் செய்யப்படும்.வங்கிகளில் பணம் எடுக்கும் போதும், நகைகள் எடுத்து வரும்போதும், பணம் மற்றும் நகைகள் கொண்டு செல்லும் போதும், கவனமுடன் இருக்க வேண்டும்.

வங்கி மற்றும் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கும் போது, சந்தேகத்திற்குரியநபர்கள் பக்கத்தில் இருந்தால், போலீசாருக்கோ அல்லது வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கலாம். குறிப்பாக, பஸ்ஸில் பயணம் செய்யும்போது மணி பர்ஸ், சூட்கேஸ் ஆகியவற்றில் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருள்கள் வைப்பதை தவிர்ப்பது நல்லது.

இரவு நேரங்களில் வீட்டை சுற்றியுள்ள மின் விளக்குகளை எரிய விட வேண்டும். திருட்டு நடப்பதை தடுக்க மற்றும் முயற்சி செய்வதை தடுக்க வீட்டின் கதவுகளில் 'அலாரம்' பொருத்த வேண்டும்.இது தவிர, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் 'ஆன்லைன்' வாயிலாக மோசடிகள் நடக்கலாம். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் அனுப்பும் 'லிங்க்'கு களை திறக்கக்கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் யாருடனும் ஓ.டி.பி., களை பகிர்ந்து கொள்ளக் கூடாது என, போலீசார் தெரிவித்தனர்.

இக்கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு பகிரப்பட்டு வருகின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe