கோவையில் சுற்றிப் பார்க்க மேலும் ஒரு இடம் தொடக்கம்: சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படக் கண்காட்சி

published 2 years ago

கோவையில் சுற்றிப் பார்க்க மேலும் ஒரு இடம் தொடக்கம்: சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படக் கண்காட்சி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

கோவை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படக் கண்காட்சியைக் கோவை மாவட்ட நிர்வாகம் திங்கட்கிழமைத் தொடக்கி வைத்தது.

ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியைக் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்தார். இக்கண்காட்சி நிரந்தரமாகச் செயல்படும். இங்கு மாவட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 60 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் பொருட்டு பெரும்பாலான மாவட்டங்களில் இதுபோன்ற கண்காட்சிகள் திறக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

கோயம்புத்தூர் மற்றும் பிற பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை அறிந்து கொள்வதற்கு இந்தக் கண்காட்சி வாய்ப்பளிக்கும் என்று கண்காட்சிக்கு வந்த பார்வையாளர் ஒருவர் தெரிவித்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் மற்றும் பிற அரசு அதிகாரிகளும் திறப்பு விழாவின் போது உடனிருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe