மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம் நடத்திய பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேர் கைது...

published 1 year ago

மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம் நடத்திய பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேர் கைது...

கோவை: சாயிபாபா காலனி, பீளமேட்டில் மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம் நடத்திய பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சாயிபாபா காலனி பகுதியை சேர்ந்தவர் 26 வயது வாலிபர். இவர் சாயிபாபா காலனி சிவக்குமார் தெருவில் உள்ள மசாஜ் சென்டருக்கு மசாஜ் செய்ய சென்றார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் மசாஜ் செய்த பின்னர் கூடுதலாக பணம் கொடுத்தால் அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என விபசாரத்திற்கு அழைப்பு விடுத்தார். இது குறித்து அந்த வாலிபர் சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்றது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் மசாஜ் சென்டர் மேலாளர் உப்பிலிபாளையம் குளத்தேரி ரோட்டை சேர்ந்த கீதா(29) என்பவரை கைது செய்தனர். தலைமறைவான மசாஜ் சென்டர் உரிமையாளர் வர்ஷா என்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். அங்கிருந்த கோவை, திருப்பூரை சேர்ந்த 3 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

இதேபோல், பீளமேடு அவிநாசி ரோட்டில் உள்ள மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மசாஜ் சென்டர் வரவேற்பாளர் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(27), பெண் புரோக்கர்கள் மற்றும் பியூட்டிசியன் விளாங்குறிச்சியை சேர்ந்த கிரிஜா(42), வேலாண்டிபாளையத்தை சேர்ந்த கிருத்திகா(31), திருநெல்வேலியை சேர்ந்த சுப்புலட்சுமி(45), ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான மசாஜ் சென்டர் உரிமையாளர் விக்னேஷ் மற்றும் மேலாளர் துடியலூரை சேர்ந்த நந்தினி(22) ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe