மத்தியசிறை தொழிற்பிரிவில் காலியாகவுள்ள நெசவுப் பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

published 1 year ago

மத்தியசிறை தொழிற்பிரிவில் காலியாகவுள்ள நெசவுப் பணியாளர் பணியிடத்திற்கு  விண்ணப்பங்கள் வரவேற்பு...

கோவை: கோவை மத்தியசிறை தொழிற்பிரிவில் காலியாகவுள்ள ஒரு நெசவுப் பணியாளர் நிலை-2 பணியிடத்தினை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இப்பணியிடம் MBC&DNC இன சுழற்சியில் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு 01.07.2023 அன்றைய தேதியில் 34 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும், 10ஆம் வகுப்பு, தேர்ச்சி பெற்றிருப்பதுடன், நெசவுப் பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். அல்லது டிப்ளமோ DGE & T or NTC in the trade of hand weaving மற்றும் 1 வருடம் செய்முறை அனுபவம் பெற்றிருக்கவேண்டும். 

தகுதியுள்ள நபர்கள் உரிய சாதிச் சான்றின் ஜெராக்ஸ் நகலுடன் சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை, கோவை-18, என்ற முகவரியிட்டு 01.12.2023 க்குள் அஞ்சல் மூலம் கோவை மத்திய சிறையில் கிடைக்கும் வண்ணம் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்படி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

மேற்கண்ட பணியிடத்தினை நிரப்புவதற்கான நேர்முக தேர்வின் தேதி மற்றும் நேர விபரம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அஞ்சல் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe